Abstract:
தற்காலத்தில் இளைஞர்கள் மத்தியில் பாரியதோர் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய ஓர் எதிர்மறையான
உணர்வே மனக்கவலையாகும்.4 ஒரு நாட்டின் முதுகெலும்பாகவும், சமூக மாற்றத்தின்
முன்னோடிகளாகவும் பிரச்சினைகளை எதிர் நோக்கும் போது அச்சம் கொள்ளாது அஞ்சா
நெஞ்சமுடையவர்களாகவும் திகழ வேண்டிய எம் இளம் சமூகத்தினர் மனக்கவலைக்குட்பட்டு
விளங்குகின்றனர். இன்று மனக்கவலையானது இளைஞர்களுக்கு மத்தியில் பல் வேறு உடல், உள,
தாக்கங்களை ஏற்படுத்தி வருவதை பார்கிறோம். குறிப்பாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக
மாணவர்களிடத்தில் மனக் கவலையின் தாக்கம் அதிகமாக காணப்படுவதுடன் அவற்றிலிருந்து
விடுபட்டு தமது வாழ்வை மகிழ்ச்சி கரமாக மாற்றியமைப்பதில் பாரிய சவால்களை
எதிர்கொள்கின்றனர.; எனவே இவ் வாய்வானது இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவ
மாணவியர்களை மையப்படுத்தி அவர்களிடம் மனக் கவலை ஏற்படுத்தும் உடல் மற்றும் உளவியல்
தாக்கங்கள் தொடர்பாக ஆய்வு செய்கின்றது. "மனக்கவலையினால் ஏற்படும் உடல் மற்றும்
உளவியல் தாக்கங்கள்" எனும் தலைப்பிலான எமது ஆய்வானது காலத்தின் தேவையைக்கருதி
மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வாகும். அவ்வடிப்படையில் இவ்வாய்வானது முதலாம் மற்றும் ,இரண்டாம்
நிலைத் தரவுகளை ஆய்வு மூலங்களாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது.