Abstract:
மொகலாயர் ஆட்சிக் காலப் பகுதியில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே அரசியல், சமய,
சமூக பொருளாதார ரீதியில் ஒரு வகையான இணக்கப்பாட்டினை அவதானிக்க முடிகிறது. பாபர்,
உமாயூன், அக்பர், ஜகாங்;கீர், ஷாஜகான், அவுரங்கசீப் போன்ற மொகலாய மன்னர்களுள் ஒரு சிலர்
சமரசப் போக்குடையவர்களாகக் காணப்பட்டாலும் அவுரங்கசீப் போன்றோர் காழ்ப்புணர்ச்சி
மிக்கவர்களாகக் காணப்பட்டனர். அதேவேளை, சாதிப்பாகுபாடு, சொத்துரிமை, விவசாயிகளின்
போராட்டம், கடுமையான சமுதாயக் கட்டமைப்பு, வௌ;வேறு கலாசாரங்களின் கலப்பு, பெண்ணடிமை,
மதமாற்றம் எனப் பல பிரச்சினைகளை இந்துக்களும் இஸ்லாமியர்களும் எதிர்கொண்டனர். இதனால்
சமூகத்தில் சீர்கேடுகள் அதிகரித்தன. எனவே, இச்சீர்கேடுகளைக் களைந்து சமூகத்தில் சமூகப்
பொறையினை ஏற்படுத்த வேண்டிய தேவை காணப்பட்டது. இக்காலப் பகுதியில் இந்துக்களுக்கும்
இஸ்லாமியர்களுக்குமிடையே ஒற்றுமையினை ஏற்படுத்துவதற்கு பாபர், அக்பர் போன்றோர் பல
செயற்பாடுகளை மேற்கொண்டனர். இப்பின்னணியில், மொகலாயர் ஆட்சிக்காலப் பகுதியில் இந்து -
இஸ்லாம் மதத்தினருக்கிடையே சமரச நிலையினை ஏற்படுத்துவதற்கு மொகலாய மன்னர்கள் ஆற்றிய
பங்களிப்பினை மையமாகக் கொண்டு இவ்வாய்வு நகர்கின்றது. இந்து - முஸ்;லிம் மக்களிடையே
சமூக ஒற்றுமையினை வலியுறுத்துவதில் மொகலாய மன்னர்களது பங்களிப்பு எவ்வாறு அமைந்தது
என்பது ஆய்வுப் பிரச்சினையாகும். மொகலாய மன்னர்களது வரலாற்றை அறிய உதவும் அகப் புறச்
சான்றுகளும் வடஇந்திய வரலாறு தொடர்பாக வெளிவந்த ஏனைய நூல்கள், கட்டுரைகள் என்பன
இவ்வாய்வின் மூலங்களாக அமைகின்றன. இவ்வாய்வு, சமூகவியல், ஒப்பீட்டு, விவரண ஆய்வு
முறைகளைப் பின்பற்றுகிறது.