Abstract:
தமிழ் இலக்கியங்களில் முக்கிய பாடுபொருள்களில் ஒன்றாக காணப்படுவது பெண்ணியம் சார்ந்த
கருத்துக்களாகும். பெண்ணியம் என்பது நவீன பெண்களை தாழ்வு படுத்தும் சமூக அரசியல்
பொருளாதார நடவடிக்கைகள் கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையை எதிர்க்கும் அல்லது
கவனப்படுத்தும் சமூக கலாசர அரசியல் இயக்கங்களின் செயற்பாடுகள் அல்லது கோட்பாடுகளின்
தொகுப்பாகும். இது ஆண் பெண் சமத்துவத்திலும் கவனம் செலுத்தும் கோட்பாடாகும். சார்லட் பன்ச்
என்பவர் ' பெண்ணியம் என்பது பெண்களுக்கான உரிமைகளை பெற்றுத்தருவது மட்டுமல்ல
சமூகத்தையே மாற்றி அமைக்க முயல்வதாகும்' என்கிறார். அந்த வகையில் அடக்கி ஒடுக்கப்பட்ட
அன்றைய இந்தியப் பெண்களின் நிலையால் உருவான சிந்தனைகளும் அதில் விளைந்த எதிர்
மனோநிலைகளும் பாரதியின் எழுத்துக்களில் பெண்ணியக் கருத்துக்கள் தோன்றக்காரணமாயின.
இக்கருத்துக்கள் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் எவ்வாறு நோக்கப்படுகின்றன என்பதனை
விபரணமுறை பகுப்பாய்வுமுறை ஒப்பீட்டுமுறை ஆகிய அணுகுமுறைகளில் இவ் ஆhய்வு
மேற்கொள்ளப்படவுள்ளது. இஸ்லாமிய மார்க்கம் பெண் உரிமைகளைப்பறிக்கின்றது என்ற பரவலான
குற்றச்சாட்டை தகர்க்கும் முகமாக பத்தொன்பதாம் நூற்றாண்டு பிறந்த (1882-1921) பாரதியின் பெண்
விடுதலைக்கருத்துக்களை கி.பி.ஏழாம் நூற்றாண்டு பிறந்த முஹம்மத் நபியின் வருகையேடு தோன்றிய
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஆராய்வதே நோக்கமாகும். அதனடிப்படையில் ஒரு நூற்றாண்டுக்கு
முன்பு தோன்றிய பாரதியின் பெண்விடுதலைக் கருத்துக்களை காட்டினும் பதின்நான்கு நூற்றாண்டுக்கு
முன்பே இஸ்லாம் சிறந்த கருத்துக்களை முன்வைத்தது மட்டுமன்றி அவை முஹம்மத் நபி மூலமாக
செயற்படுத்தியும் காட்டப்பட்டன என்பதனை இவ் ஆய்வின் ஊடாக அறிய முடிகின்றது.