dc.description.abstract |
விவாகரத்தின் பின்னர் முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் சவால்கள் அவர்களது
குடும்பச் சிதைவுக்கும், நெறிபிறழ்வுக்கும், வறுமைக்கும் வழிகோலியுள்ளன. இந்தவகையில்
இப்பிரச்சினைகள் தொடர்பான ஆய்வு அவசியமாகின்றது. சம்மாந்துறைப் பிரதேசத்தில் விவாகரத்துப்
பெற்ற முஸ்லிம் பெண்களின் வாழ்வியல் நிலையினை கண்டறிந்து, அவர்கள் எதிர்நோக்கும்
வாழ்வியல் சவால்களை பரிசீலிப்பதை இவ்வாய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. அளவு, பண்பு
ரீதியிலான ஆய்வு முறையிலமைந்த இக்கட்டுரையை அமைப்பதற்கு ஆய்வுப் பிரதேசத்தில்
விவாகரத்துப் பெற்ற பெண்களில் 144 பேரிடம் வினாக்கொத்து வழங்கப்பட்டும், ஆய்வு விடயத்துடன்;
தொடர்புடைய 10 பிரமுகர்களிடம் நேர்காணல் செய்யப்பட்டும் தகவல்கள் பெறப்பட்டு, அவை
பகுப்பாய்வு செய்யப்பட்டதோடு அவை தொடர்பான ஆவணங்களும் மீளாய்வு செய்யப்பட்டது.
விவாகரத்துப் பெற்ற முஸ்லிம் பெண்களின் வாழ்வியல் நிலையானது வறுமை, குடும்பச் சுமை
அதிகரிப்பு என்பவற்றோடு அவர்கள் கூலித் தொழில், தெருவோரப் பிச்சைக்காரர், மனநோயாளி,
நெறிபிறழ்ந்த குடும்ப தலைவி போன்ற நிலைகளில் காணப்படுகின்ற அதே நேரம் அவர்கள்
எதிர்நோக்கும் வாழ்வியல் சவால்களாக பொருளாதாரம், உடலியல், உளவியல் சார்ந்தவை,
பாதுகாப்பு தொடர்பானவை, குடும்பத்தின் ஒதுக்கு நிலை, சமூகத்தின் ஒதுக்கு நிலை என்ற
அமைப்புகளில் காணப்படுகின்றது என்பது இவ்வாய்வின் பிரதான கண்டறிதல்களாகும். இவ்வாய்வு
சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்புக்கள், குடும்ப ஆற்றுப்படுத்தலில் ஈடுபடுவோர்; துணையாகக்
கொள்வதற்கு ஏதுவானதாகும். |
en_US |