Abstract:
இவ்வாய்வின் பிரதான நோக்கமானது பாடசாலை மாணவர்களிடம் சுய-நெறிப்படுத்தப்பட்ட
கற்றலினை விருத்தி செய்வதில் ஆசிரியர்களின் வகிபங்கு தொடர்பான ,லக்கிய
மீளாய்வினை இனங்காண்பதாகும். இந்நோக்கினை அடைந்து கொள்வதற்காக பின்வரும்
குறிக்கோள்கள் அமைக்கப்பட்டன: சுய-நெறிப்படுத்தப்பட்ட கற்றல் என்ற எண்ணக்கருவினை
விளங்கிக் கொள்ளல். சுய-நெறிப்படுத்தப்பட்ட கற்றல் திறனுடைய மாணவர்களின்
பண்புகளை முன்னைய ஆய்வுகளிலிருந்து இனங்காணல் சுய-நெறிப்படுத்தப்பட்ட கற்றல்
உத்திகளை இலக்கியங்களிலிருந்து இனங்காணல் சுய-நெறிப்படுத்தப்பட்ட கற்றல்
தொடர்பாக ஆசிரியர்களின் வகிபங்கினை முன்னைய ஆய்வுகளிலிருந்து கண்டறிதல். இதன்
பொருட்டு 2000-2015 வரையிலான ,லக்கியங்கள் பகுப்பிற்குற்படுத்தப்பட்டன. இலக்கிய
மீளாய்வின் முடிவாக சுய நெறிப்படுத்தப் பட்ட கற்றல் தொடர்பாகவும் அதில்
ஆசிரியர்களின் வகிபாகம் பற்றி இலங்கையில் ஆய்வுகள் போதுமானளவு
முன்னெடுக்கப்படவில்லை. எனவே சுய நெறிப்படுத்தப்பட்ட கற்றல் தொடர்பாக பல்வேறு
நோக்குகளில் ஆய்வுகள் செய்யப்படுவது அவசியமாகின்றது.