SEUIR Repository

அறபு, இஸ்லாமிய கற்கைகளுக்கு கலாநிதி எம். ஏ. எச். சுக்ரி அவர்களின் பங்களிப்பு

Show simple item record

dc.contributor.advisor Mazahir, S. M. M.
dc.contributor.author Aroos, A. R.
dc.date.accessioned 2026-02-18T05:41:27Z
dc.date.available 2026-02-18T05:41:27Z
dc.date.issued 2024
dc.identifier.citation Abstract Compilation of Undergraduate Dissertation (Academic Year 2007/2008 to 2020/2021) en_US
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7662
dc.description.abstract அறபு, இஸ்லாமிய கற்கைகள் எனும் போது இஸ்லாத்தில் காணப்படுகின்ற பெரும்பாலான கற்கைத் துறைகள் இதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பலவழிகளிலும் முக்கியத்துவம் பெறும் இவ்வாய்வுத் தலைப்பு “தனி நபர் அய்வு” என்றரீதியில் அமையப் பெற்றிருப்பினும், பெரும்பாலான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், உள்ளடக்கத்தினை வேண்டி நிற்பதாகவும் இவ்வாய்வு அமையப்பெற்றுள்ளமை, முதலில் சுட்டிக் காட்டப்பட வேண்டிய அம்சமாகும். இவ்வாய்வு தொடர்பான ஆய்வுச் சுருக்கம் பற்றி நோக்குகையில், அத்தியாயம் இரண்டில் கூறப்பட்ட கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி தொடர்பான பொதுவாழ்க்கை பற்றிய அறிமுகத்தின் ஊடாக ஆய்வுக்குரியவரின் பல சிறப்பான அம்சங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. இதன் போது, வாழ்வும் பணியும், பிறப்பு, வளர்ப்பு, குடும்ப பின்னணி பற்றிய அறிமுகம், ஆரம்பக் கல்வி, கலாநிதிக் கற்கை, பிறதுறைகள் ஊடான பங்களிப்புகள் என்பன ஆய்வு செய்யப்பட்டுள்ளதுடன் இதனுடன் இணைந்ததாக சமகால அறிஞர்கள், கலாநிதி சுக்ரி அவர்களைப் பற்றிக் கொண்டிருக்கும் கருத்துரைகளும் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. இதன் பின்னணியில் இரண்டாவது அத்தியாயமானது ஆய்வுக்குரியவரின் பல சிறப்பான அம்சங்கள், அவரின் பங்களிப்புகள், பணிகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளமையை அவதானிக்க முடியும். மூன்றாவது அத்தியாயமானது இவ்வாய்வின் முக்கியமானதும், ஆய்வின் கருதுகோளுடன் தொடர்புபட்டதுமான தலைப்பாகும். ஆதன் உள்ளடக்கத்தில் அறபு, இஸ்லாமிய கற்கைகளின் கீழ்: விரிவுரையாளர், துறைத் தலைவர், என்றரீதியில் பல விடயங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், பாடவிதானங்கள் தயாரித்தலிக் கீழ் இரண்டு முக்கயமான விடயங்களான: பாடசலை ரீதியான பாடவிதானங்கள் தயாரிப்பதின் ஊடான பங்களிப்பு, பல்கலைக் கழக ரீதியான பங்களிப்பு என்ற விடயங்கள் விரிவாக நோக்கப்பட்டுள்ளன. மூன்றாவது அத்தியாயமானது, நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடத்தின் ஊடான பங்களிப்புகளை நோக்குகின்றது. இதன்போது, விரிவுரை நிகழ்த்துதல், வளவானர்களை உருவாக்குதல் என்பனவும் நளீமிய்யாவின் முக்கிய அமைப்பான ராபிதா அந்-நளீமிய்யீன் மூலமாக கலாசிதியவர்கள் அறபு, இஸ்லாமிய கற்கைகளுக்கு ஆற்றியுள்ள பங்களிப்புகளும் விரிவகா முறையில் ஆய்விற்கு உற்படுத்தப்பட்டுள்ளது. நான்காவது அத்தியாயமானது, கலாநிதி எ;.ஏ.எம்.சுக்ரியினை மற்றுமொரு முறையில் எழுத்துத் துறையுடள் தொடர்புபடுத்தி ஆய்விற்கு உற்படுத்தியுள்ளது. அதாவது, நூல்கள் வெளியீடு, இஸ்லாமிய சிற்தனை எனும் சஞ்சிகைக்கான ஆசிரியர் உரைகள் மூலம் வழங்கியுள்ள ஆழமான கருத்துக்கள் என்பன பிரதானதான இடத்தில் வைத்து நோக்கப்படிருப்பினும், ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பில் ஆற்றியுள்ள பங்களிப்புகள் பிரிவின் கீழ்: உள்நாட்டு ஆய்வுக் கட்டுரைகள், வெளிநாட்டு ஆய்வுக் கட்டுரைகள் என்ற வகையில் கலாநிதி சுக்ரியவர்களினால் இதுவரை எழுதப்பட்ட, மாநாடுகளில் சமர்ப்பிக்கப்பட்ட மற்றும் தேசய, சர்வதேச கஞ்சிகைகள், பத்திரிகைகளினால் பிரசுரிக்கப்பட்ட அறபு, இஸ்லாமிய கற்கைகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் இவ்வாய்வின் பொருட்டு எடுத்தாளப்பட்டுள்ளன. வானெலி, தொலைக்காட்சி உரையாடல் தொடர்பிலும் கலாநிதியவர்களின் பங்களிப்புகள் பாரிசீலிக்கப்பட்டுள்ளது. நான்காம் அத்தியாயத்தின் இறுதிப் பகுதி, கலைக் களஞ்சியத்துக்கு ஆற்றியுள்ள பங்களிப்புகள் தொடர்பில் விபரிக்கின்றது. ஆய்வின் அறுதிப் பகுதியானது, ஆய்வு தொடர்பான மதிப்பீடுகளையும், முடிவுரையையும் கொண்டதாக அமையப்பெற்றுள்ளதானது, இவ்வாய்வின் கருதுகோளிளை மெய்ப்பிக்கும் வகையில் அமைவதைக் கண்டுகொள்ள முடியும். en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka en_US
dc.subject அறபு இஸ்லாமிய கற்கை en_US
dc.subject கலாநிதி எம். ஏ. எச். சுக்ரி en_US
dc.subject பங்களிப்பு en_US
dc.title அறபு, இஸ்லாமிய கற்கைகளுக்கு கலாநிதி எம். ஏ. எச். சுக்ரி அவர்களின் பங்களிப்பு en_US
dc.type Dissertation en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account