| dc.description.abstract |
மதவாக்குளப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களிடையேமணவாழ்க்கைப் பிரச்சினைகள் கடந்த சில வருடங்களாக அதிகரித்துக் கொண்டு செல்வதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதன் விளைவுகளில் ஒன்றாக இப்பிரதேச முஸ்லிம்களிடையே விவாகரத்தை நாடிச்செல்வோரின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டு எனவே இவ்வாறான மணவாழ்க்கைப் பிரச்சினைகளுக்கான அடையாளப்படுத்தப்பட்ட ஐந்து காரணங்களான வெளிநாட்டு வேலைவாய்ப்பு, போதைப்பொருள் பாவனை, முறையற்ற தொடர்பு, வறுமை, முன்கோபம் என்பன மணவாழ்வில் எவ்வாறான தாக்கத்தினை செலுத்துகின்றன என்பதனை கண்டறிந்து, அவற்றின் இஸ்லாமியப் பார்வையினை முன்வைப்பதே இவ்வாய்வின் நோக்கமாகும். இது ஒரு பண்புசார் ஆய்வு என்பதனால் இரண்டு வகையான தரவுகள் பின்வரும் வழிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலாம் நிலைத்தரவுகள் நேர்காணல், அவதானிப்பு ஆகிய வழிகளில் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. ஆங்காங்கே புள்ளி விபரவியல் அடிப்படையில் வீதங்களும் கணிப்பிடப்பட்டப்பட்டுள்ளன. மணவாழ்க்கைப் பிரச்சினைகளின் இஸ்லாமியப் பார்வையினை நோக்குவதற்கு இரண்டாம் நிலைத் தரவுகள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வின் மூலம் மதவாக்குளப் பிரதேச முஸ்லிம்களின் மணவாழ்க்கைப் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது. மணவாழ்க்கைப் பிரச்சினைகளுக்கான காரணங்களுள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதானமானதாக உள்ளது. அதற்கு அடுத்தநிலையில் போதைப்பொருள் பாவனை, முறையற்ற தொடர்பு, வறுமை, முன்கோபம் என்பன மணவாழ்க்கைப் பிரச்சினைகளில் முறையே தாக்கம் செலுத்துகின்றன. இவற்றுள் முன்கோபம் ஏனைய காரணங்களைவிட குறைந்தளவு தாக்கம் செலுத்துகின்றது. இஸ்லாம் பற்றிய தெளிவின்மை, பாரம்பரிய இஸ்லாமியப் போக்கு, இப்பிரச்சினைகள் பற்றிய இஸ்லாமிய விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்படாமை, இஸ்லாமிய அமுலாக்கம் போதாமை, இஸ்லாமிய சமூகக் கூட்டுப்பொறுப்பின்மை, இஸ்லாமிய புத்தெழுச்சிவாதக் கருத்துக்கள் மதவாக்குளப் பிரதேசத்தை சென்றடைந்தமை போதாமை இப்பிரச்சினைக்கான காரணங்கள் தொடர்ந்திருப்பதற்கு வழிகோலியுள்ளது. எனவே மதவாக்குளப் பிரதேச முஸ்லிம்களிடம் மணவாழ்க்கைப் பிரச்சினைகள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அது தொடர்பான இஸ்லாத்தின் என்பன பற்றிய கருத்து நிலைகளை தெளிவுபடுத்துவதற்கும், எதிர்காலத்தில் மணவாழ்க்கைப் பிரச்சினைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வோருக்கும் இவ்வாய்வு பயனுடையதாக அமையும். |
en_US |