SEUIR Repository

இலங்கையில் மஸ்ஜித் கட்டிடக்கலையின்பரிணாமம்: வரலாற்று மஸ்ஜித்களில் நேர்வுநிலை ஆய்வு

Show simple item record

dc.contributor.advisor Sarjoon, R. A.
dc.contributor.author Fayas
dc.date.accessioned 2026-02-18T07:34:41Z
dc.date.available 2026-02-18T07:34:41Z
dc.date.issued 2024
dc.identifier.citation Abstract Compilation of Undergraduate Dissertation (Academic Year 2007/2008 to 2020/2021) en_US
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7680
dc.description.abstract இஸ்லாமிய கட்டிடக்கலை அதன் நுண்கலைகளில் ஒன்றாகும். பிரதான இஸ்லாமிய நிறுவனமாக மஸ்ஜித் அதனை பிரதிபலிப்பதோடு, பிரத்யோகமான கட்டிடக்கலை அம்சங்களைக் கொண்டு நிர்மாணிக்கப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருட கால வரலாற்றினை கொண்டுள்ள இலங்கை முஸ்லிம்கள் மஸ்ஜித்களை நிர்மாணித்து வருகின்றனர். இம்மஸ்ஜித்களில் சில கட்டிடக்கலை அம்சங்களுடன் கூடிய ஒன்றாகவும் உள்ளன. இப்பின்னணியில் இவ்வாய்ப்பு இலங்கையில் மஸ்ஜித் கட்டிடக்கலையின் பரிணாம வளர்ச்சியினையும் வரலாற்று மஸ்ஜித்களின் காண்பிய அழகியல் வெளிப்பாட்டினை பரிசீலிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. பண்பு சார் ஆய்வு வழிமுறைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இல் நேர்‌நிலை ஆய்வானது‌ நேரடியான கள ஆய்வினூடாக பெறப்பட்ட அவதானக்குறிப்புக்கள், புகைப்பட ஆய்வினூடாக (Photographic Study) பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வுக்குட்படுத்தியுள்ளது. இலக்கிய மீளாய்வின் மூலம் ஆய்வுக்கான கோட்பாட்டு அமைப்புத்திட்டம் நிறுவப்பட்டுள்ளது. பிற்பட்ட காலப்பகுதியில் இலங்கையில் முஸ்லிம் சமூகம் பெற்ற வளர்ச்சியும் செழிப்பும் நிலையான கட்டிடத்தைக்கொண்ட மஸ்ஜித்களை நிர்மாணிக்க வழிகோலியுள்ளது. இம்மஸ்ஜித்கள் சில அதற்கே உரித்தான கட்டிடக்கலை அம்சங்களைக் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் கண்டி, காலி, கொழும்பு, புத்தளம் மற்றும் களுத்துறை போன்ற இடங்களிலுள்ள மஸ்ஜித்கள் வரலாற்று மஸ்ஜித்களாக அடையாளப்படுத்த தக்கனவாகும். மஸ்ஜித் கட்டிடக்கலையின் இலங்கையில் வரலாற்று மஸ்ஜித்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும் கால தேச பரிமாணத்திற்கு ஏற்ப வேறுபாடுகளையும் இக்கட்டிடக்கலையில் காண முடிகின்றது. இது தவிர இலங்கை முஸ்லிம்களுக்கே உரித்தான பண்பாட்டு பாரம்பரியம், கொள்கை தனித்துவம் என்பனவும் இலங்கை மஸ்ஜித் கட்டிடக்கலையில் உள்ளன. இவ்வாய்வானது இலங்கை மஸ்ஜித் கட்டிடக்கலைக்கான ஓர் ஆவணமாவதோடு மஸ்ஜித் கட்டிட நிர்மாணத்தில் ஈடுபடுபவர்களுக்கான வழிகாட்டியாகவும் அமையவல்லது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka en_US
dc.subject இலங்கை en_US
dc.subject மஸ்ஜித் en_US
dc.subject மஸ்ஜித் கட்டிடக்கலை en_US
dc.subject இஸ்லாமிய கட்டிடக்கலை en_US
dc.subject அழகியல் en_US
dc.title இலங்கையில் மஸ்ஜித் கட்டிடக்கலையின்பரிணாமம்: வரலாற்று மஸ்ஜித்களில் நேர்வுநிலை ஆய்வு en_US
dc.title.alternative Evolution of mosque architecture in Sri Lanka: a case study on the historical mosques en_US
dc.type Dissertation en_US
dc.contributor.department Islamic Studies en_US
dc.identifier.regnum SEU/IS/16/IC/100 en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account