SEUIR Repository

விவாகரத்துக்களை தடுப்பதில் இஸ்லாமிய குடும்ப வழிகாட்டுதலின் வகிபங்கு: இலங்கை குருநாகல் மாவட்டத்தை மையப்படுத்திய ஆய்வு

Show simple item record

dc.contributor.advisor Nisfa, M. S. F.
dc.contributor.author Hanoona, M. R. F.
dc.date.accessioned 2026-02-27T06:04:44Z
dc.date.available 2026-02-27T06:04:44Z
dc.date.issued 2024
dc.identifier.citation Abstract Compilation of Undergraduate Dissertation (Academic Year 2007/2008 to 2020/2021) en_US
dc.identifier.uri http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7784
dc.description.abstract ஒரு சமூகத்தின் இன்றியமையாத நிறுவனமாக குடும்பம் காணப்படுகிறது. ஆண்களும் பெண்களும் தமது சொந்த முன்னேற்றத்திற்காக மட்டுமன்றி சமூகத்தின் நலனுக்காகவும் திருமண ஒப்பந்தத்தில் இணைந்து கொள்கின்றனர். உலகில் உள்ள ஒவ்வொரு மதங்களும் திருமணத்திற்கான அனுமதியை வழங்குகிறது. இந்த அடிப்படையில் இஸ்லாமும் திருமணம் செய்வதை அனுமதித்துள்ளது. திருமண பந்தமொன்றின் முடிவுக் கட்டமாக விவாகரத்து காணப்படுகிறது. திருமணவாழ்வில் கணவன் - மனைவி இருவரும் இணைந்து வாழ்வதற்கு முடியாத சந்தர்ப்பங்களில் தீர்வாக இஸ்லாம் விவாகரத்தை அனுமதித்துள்ளது. உலக நாடுகளில் பரவலாக விவாகரத்துக்கள் இடம்பெற்றுவருகின்றன. இலங்கையிலும் விவாகரத்து வீதம் அண்மைக்காலங்களில் அதிகரித்துச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிண்ணனியில் இவ்வாய்வானது இலங்கையின் குருநாகல் மாவட்ட முஸ்லிம்களிடையே இடம்பெறும் விவாகரத்துக்கள் தொடர்பிலும் அவற்றை இழிவளவாக்குவதில் இஸ்லாமிய வழிகாட்டல்களையும் தீர்வாக முன்வைக்கிறது. பண்புசார், அளவுசார் முறைமைகள் இரண்டும் கலந்து பிரயோகிக்கப்பட்டுள்ள இவ்வாய்வுக்காக குருநாகல் மாவட்ட காதிநீதிமன்றப் பிரிவுகளில் 2 காதிநீதிமன்றப்பிரிவுகளின் கீழ் உள்ள முஸ்லிம் குடும்பங்களில் 2018-2022 (செப்டம்பர்) காலப்பகுதியில் விவாகரத்துப்பெற்ற 150 பேரிடம் வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டு பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டன. அத்துடன் 5 வருடங்களில் இடம்பெற்ற விவாகரத்துக்கள் தொடர்பான காதிநீதிமன்ற அறிக்கைகளும் இரண்டாம் நிலைத் தரவுகளாக ஆய்வுத் தலைப்போடு தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள், சஞ்சிகைகள், இணையத்தள ஆக்கங்கள், என்பன பயன்படுத்தப்பட்டன. இஸ்லாமிய குடும்பவாழ்வு வழிகாட்டல்கள் தொடர்பான போதிய அறிவின்மை பல்வேறு பிரச்சினைகளுக்கு மூல காரணமாக இருப்பதுடன் சமூக,பொருளாதார, சமய மற்றும் தனிப்பட்ட காரணிகள் விவாகரத்துக்களில் செல்வாக்கு செலுத்துகின்றன என்பதும் கண்டறியப்பட்ட உண்மைகளாகும். விவாகரத்துக்களை இழிவளவாக்குவதுடன் தொடர்பான ஆலோசணைகளை இவ்வாய்வு முன்வைத்துள்ளது. en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka en_US
dc.subject இஸ்லாமிய குடும்ப வழிகாட்டல் en_US
dc.subject விவாகரத்து en_US
dc.subject குருநாகல் en_US
dc.subject திருமண முன் வழிகாட்டல் en_US
dc.subject பஸ்ஹ் விவாகரத்து en_US
dc.title விவாகரத்துக்களை தடுப்பதில் இஸ்லாமிய குடும்ப வழிகாட்டுதலின் வகிபங்கு: இலங்கை குருநாகல் மாவட்டத்தை மையப்படுத்திய ஆய்வு en_US
dc.title.alternative The role of Islamic family guidance in preventing divorces: a study based on Kurunegala district in Sri Lanka en_US
dc.type Dissertation en_US
dc.contributor.department Islamic Studies en_US
dc.identifier.regnum SEU/IS/16/IC/078 en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search SEUIR


Advanced Search

Browse

My Account