Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/3606
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorநிஷாந்தினி, எஸ்.-
dc.contributor.authorறிப்தா, எம். யு. எப்.-
dc.contributor.authorசிவசங்கரி, வி.-
dc.date.accessioned2019-06-28T06:09:35Z-
dc.date.available2019-06-28T06:09:35Z-
dc.date.issued2018-12-17-
dc.identifier.citation8th International Symposium 2018 on “Innovative Multidisciplinary Research for Green Development”. 17th - 18th December, 2018. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp. 614-621.en_US
dc.identifier.isbn978-955-627-141-6-
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/3606-
dc.description.abstractபிரித்தானியப் பேரரசின் ஆட்சியின் கீழ் அடிமைநாடாகவிளங்கிய இந்தியாவிலிருந்து 1824ஆம் ஆண்டுகாலப்பகுதியில் இலங்கைக்குதொழிலாளர்கள் அழைத்துவரப்பட்டனர். இவ்வாறுகுடிபெயர்ந்துவந்தவர்களேமலையகமக்கள்,மலையகத் தமிழர், இந்தியவமசாவழித் தமிழர் போன்றபெயர்களால் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் இலங்கையில் மலையக இலக்கியம் எனும் புதியதொரு இலக்கியத் தோற்றத்திற்குகாரணமாகினர். முலையகமக்களின் பண்பாட்டு அம்சங்களையும் வாழ்வியலையும் அடையாளப்படுத்துவதாக ஆரம்பகால கவிதை முயற்சிகளும் (கும்மி, தெம்மாங்கு, சிந்து) அதனைத் தொடர்ந்து கட்டுரை, சிறுகதை, நாவல் போன்றனவும் விளங்குகின்றன. மலையக மக்களையும் அவர்களதுவாழ்வியல் பிரச்சினைகளையும் அவலங்களையும் யதார்த்தபூர்வமாக வெளிப்படுத்துவதில் சிறுகதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்தவகையில் மலையகச் சிறுகதைகள்,உழைக்கப் பிறந்தவர்கள்ஆகியசிறுகதைத் தொகுதிகள் சிறப்பாகநோக்கப்படுகின்றன. இத்தொகுதிகளுள் உள்ளடங்கும் சிறுகதைகள் மலையக மக்கள் எதிர்கொண்டஅரசியல், சமூக, பொருளாதாரரீதியான பல்வேறு வாழ்வியல் பிரச்சினைகளை சித்திரிப்பதாக அமைந்துள்ளன. குறிப்பாக, பிரஜாவுரிமை, இனக்கலவரம், தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டமை, காணிகள் பறிமுதல் செய்யப்பட்டமை, அரசியல் பிரதிநிதித்துவம், வறுமை, குடும்பத் திட்டமிடலின்மை, கல்வி வசதியின்மை, சுகாதார பிரச்சினை ,பாலியல் ரீதியான கொடுமைகள், குடிப்பழக்கம், உழைப்புச் சுரண்டப்படல், வர்க்கவேறுபாடு, காலநிலை மற்றும் போக்குவரத்து எனப் பலவாறு பிரச்சினைகள் எடுத்துரைக்கப்படுகின்றமையை அவதானிக்கலாம். இத்தகைய பிரச்சினைகளை மலையக இலக்கியங்கள், கட்டுரைகள், ஆய்வுகள் போன்றன முக்கிய பிரச்சினைகளாக எடுத்துரைக்கின்ற நிலை காணப்படுகின்றது. இந்நிலையில், இறந்தவர்களைப் புதைப்பதில் மலையகமக்கள் எதிர்நோக்கிய சிக்கல்களை முக்கிய சமூக பிரச்சினையாக சிறுகதைகள் மூலமாக எடுத்துக்காட்டப்படுகின்றமையை அவதானிக்கலாம். இருப்பினும் இது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படாத நிலையே காணப்படுகின்றது. மலையகச் சிறுகதைகள்,உழைக்கப் பிறந்தவர்கள்ஆகியசிறுகதைத் தொகுதிகளில் இடம்பெறும் ‘குமரிக்காடு’,‘நமக்கென்றொருபூமி’,‘மையத்து’,‘தியாகபூமியிலே’,‘மொய்க்காசு’,‘அம்மாசி இலங்கைபிரஜையானான்’போன்ற சிறுகதைகளில் மேற்குறித்தபிரச்சினை இழையோடியுள்ளமையை அவதானிக்கலாம். அந்தவகையில் இந்தசிறுகதைகளைஅடிப்படையாகக் கொண்டு இறந்தவர்களைப் புதைப்பதில் மலையகமக்கள் எதிர்நோக்கிய சிக்கல்களை எடுத்துக்கூறுவதே இவ்வாய்வின் நோக்கமாகும். ஆய்வுநோக்கத்தை அடைந்துகொள்ளும் பொருட்டுவிளக்கமுறை, சமூகவியல் ஆய்வுமுறைகள் கையாளப்பட்டுள்ளன. இதன் பொருட்டு ‘மலையகச் சிறுகதைகள்’,‘உழைக்கப் பிறந்தவர்கள்’ஆகியசிறுகதைத் தொகுதிகள் இரண்டாம் நிலைத் தரவுகளாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வுடன் தொடர்புடைய ஏனைய ஆய்வுக் கட்டுரைகள், சஞ்சிகைகள், இணையதளசெய்திகள், பிறஆக்கங்கள் என்பன இவ்வாய்வின் துணைத்தரவுகளாக அமைகின்றன. இறுதியாக இவ்வாய்வானது அரசியல், பொருளாதார,சமூகரீதியாகமலையகமக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை எடுத்துரைக்கும் சிறுகதைகளில் இறந்தவர்களைப் புதைப்பதில் அவர்கள் எதிர்நோக்கிய சிக்கல்களை முக்கிய பிரச்சினையாக எடுத்துக்காட்டுவதையும் அப்பிரச்சினையின் அடிப்படையில் தோன்றிய விளைவுகளை எடுத்துரைப்பதும் இதற்குப் பின்னணியாக அமைந்த காரணங்களை எடுத்துரைப்பதும் இவ்வாய்வின் முடிவாக அமையும்.en_US
dc.language.isootheren_US
dc.publisherSouth Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lankaen_US
dc.subjectமலையகமக்கள்en_US
dc.subjectஇறந்தவர்களைப் புதைத்தல்en_US
dc.subjectபிரச்சினைகள்en_US
dc.subjectமலையகச் சிறுகதைகள்en_US
dc.subjectஉழைக்கப் பிறந்தவர்கள்en_US
dc.titleஇறந்தவர்களைப் புதைப்பதில் மலையகமக்கள் எதிர்நோக்கிய சிக்கல்கள்: மலையகச்சிறுகதைகளைமையப்படுத்திய ஓர்ஆய்வுen_US
dc.typeArticleen_US
Appears in Collections:8th International Symposium - 2018

Files in This Item:
File Description SizeFormat 
Full papers 614-621.pdf4.62 MBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.