Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5528
Title: கைத்தொலைபேசிப் பாவனை மாணவர் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம்: தோப்பூர் பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு.
Authors: Siyana, A. K.
Nathira Jahan, S.
Keywords: கைத்தொலைப்பேசிப்பாவனை
மாணவர்கள்
தாக்கம்
தோப்பூர்
Issue Date: 19-Jan-2021
Publisher: Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka.
Citation: 9th South Eastern University International Arts Research Symposium -2020 on " Global Dimension of Social Sciences and Humanities through Research and Innovation". 19h January 2021. South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka. p.96.
Abstract: இன்று உலகில் அதிகரித்த தொலைபேசிப்பாவனையின் விளைவானது இன, மத வேறுபாடின்றி அனைத்து மக்களின் வாழ்வோடும் இரண்டரக்கலந்த மிக முக்கிய பல்லூடகங்களில் ஒன்றாக கையடக்கத் தொலைபேசி காணப்படுகிறது. இதனடிப்படையில் அனைத்து மக்களின் கைகளிலும் சர்வசாதாரணமாக கையாளப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இதனை மாணவர்களின் கைகளிலும் அதிக செல்வாக்கைப் பெற்றிருப்பதனைக் காண முடிகின்றது. இதனடிப்படையில் மாணவர்கள் அதிகமான அளவில் தொலைபேசிப்பாவனையை கொண்டுள்ளனர் என்பதனை இவ்வாய்விற்கான பிரச்சினையாக கொள்ளப்பட்டு இதனை மைய்யப்பபடுத்திய வகையில் இத்தொலைபேசிப் பாவனையானது மாணவர்களின் எத்தேவையினை பூர்த்தியாக்குகின்றது? எத்தகைய விளைவுகளை கொண்டுள்ளது? போன்ற வினாக்களுக்கு விடை காண்பதனை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டது. இது ஓர் அளவை நிலை முறையிலான (ஞரயவெவையவiஎந) ஆய்வாகும். இவ்வாய்வானது முதலாம், இரண்டாம் நிலைத்தரவுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. முதலாம் நிலைத்தரவுகளை பெறுவதற்கு தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களிடம் (தரம் 9-11) இவ்வாய்வின் நோக்கத்தினை அடைந்துகொள்ள தேவையான அனைத்து வினாக்களும் வடிவமைக்கப்பட்ட வினாக்கொத்துகள் மூலம் தரவுகள் அனைத்தும் பெறப்பட்டன. இத்தரவுகள் ஆளுழுககiஉந 2016இ நுஒஉநடட மென்பொருளினை பயன்படுத்தி விபரணப் புள்ளிவிபரவியல் ஊடாக பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டன. இவ்வாய்வுக்கான கோட்பாட்டு ரீதியிலான கட்டமைப்பை நிறுவுவதற்கு இரண்டாம் நிலைத் தரவுகள் பாடசாலை அலுவலக ஆவணங்கள் மற்றும் இதர தகவல்கள் மூலமாகவும் திரட்டப்பட்டன. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் கண்டறிதலாக அதிகரித்தளவில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் தொலைபேசிப் பாவனை காணப்படுகின்றதுடன் அவற்றுள் குடும்ப உறவினர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்தல், திகில் வீடியோக்கள் பார்த்தல், அறிமுகமற்றோருடனான தொடர்புகளை பேணுதல், தனிமையில் அதிகம் தொலைபேசியைப் பயன்படுத்தல் போன்ற பாதகமான விளைவுகள் மாணவர்களிடையே அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன என்ற முடிவு கண்டறியப்பட்டது. தரம் 9 -11 வரையிலான மாணவர்கள் மேலதிக வகுப்புகளுக்கு அனுப்புவதுடன் அவர்களை கல்வி தொடர்பான விடயங்களில் அதிக நேரத்தை செலவிடுவதற்கும் வாய்ப்பை வழங்குதல். அவசியமற்ற நண்பர்கள் தொடர்புகள் மற்றும் அதிகளவான பணத்தை குழந்தைகளுக்கு வழங்கி அவசியமற்ற செலவுகளை குழந்தைகள் மேற்கொள்ளாமலிருக்க பெற்றோர்கள் கவனம் கொள்ள வேண்டும் போன்றன பரிந்துரைக்கப்பட்டன.
URI: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5528
ISBN: 978-955-627-253-6
Appears in Collections:SEUIARS - 2020

Files in This Item:
File Description SizeFormat 
SEUIARS2020 Proceeding-finalized_2.pdf1.89 MBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.