Please use this identifier to cite or link to this item:
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5704
Title: | Impact of regional language difference and linguistic knowledge of parents on children’s reading ability. (An action research) |
Other Titles: | பிள்ளைகளின் வாசிப்புத் திறனில் பெற்றௌர்களின் மொழியறிவினதும் பிரதேச மொழி வேறுபாட்டினதும் தாக்கம். |
Authors: | Yumna, A. S. P. |
Keywords: | எழுத்துத் திறன் வாசிப்புத் திறன் செவிமடுத்தல் திறன் பேச்சுத் திறன் |
Issue Date: | 4-Dec-2021 |
Publisher: | Faculty of Islamic Studies & Arabic Language, South Eastern University of Sri Lanka, University Park, oluvil, 32360, Sri Lanka |
Citation: | 8th International Symposium 2021 on “Promoting Faith-Based Social Cohesion through Islamic and Arabic Studies”. 4th August 2021. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp.600-611. |
Abstract: | இன்றைய கால கட்டத்தில் கல்வி இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகின்றது. ஒரு பிள்ளை இத்தகைய கல்வியை குடும்பம், தான் வாழும் சூழல் மற்றும் பாடசாலை என்பவற்றிலிருந்து பெற்றுக் கொள்கிறது. கல்வியைக் கற்கின்ற போது ஒருவரிடத்தில் மொழித்திறன் விருத்தி ஏற்படுகின்றது. இங்கு மொழித்திறன் விருத்தியானது எழுத்துத் திறன், வாசிப்புத் திறன், செவிமடுத்தல் திறன், பேச்சுத் திறன் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. இவ்வாறான மொழித்திறன் ஒவ்வொருவரிடமும் உயர்வான நிலையில் காணப்படும் பொழுது கற்றல் சிறப்பாக அமையும். அந்த வகையில் மாணவர்களிடத்தில் காணப்படும் வாசிப்புத் திறன் தொடர்பாக ஒரு செயல்நிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதற்காக இலங்கையில் கம்பஹா மாவட்டத்திலுள்ள தமிழ்மொழி மூல 1 C பாடசாலை ஒன்று வசதி மாதிரி எடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டது. இதற்கான மாதிரியாக தரம் 7 இல் கல்வி கற்கும் 6 மாணவர்கள் நோக்க மாதிரியின் அடிப்படையிலும் இரண்டு உதவி ஆசிரியர்களும் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் இவ்வாய்வு செயல்நிலை ஆய்வு என்பதனால் தரம் 07 பாடநூல், தரம் 05 பாடநூல், சிறிய கதைகள் அடங்கிய பிரதிகள், செயற்பாட்டு பத்திரங்கள், காணொளிகள் mobile apps ஆகிய ஆய்வுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இவ்வாய்வின் முடிவாக, பெற்றௌர்களின் மொழியறிவும், சுற்றியுள்ள பிரதேசச் சூழலும் மாணவர்களின் வாசிப்புத் திறன் பின்னடைவுக்கான காரணங்களில் முக்கிய இடத்தை வகிக்கின்றன என்பது கண்டுடறியப்பட்டது. இதனை நிவர்த்தி செய்வதற்கு நவீன தொழினுட்ப கற்றல் கற்பித்தல் துணைச் சாதனங்களைப் பயன் படுத்தல், பிள்ளைகள் அதிகம் விரும்பி வாசிக்கும் விடயங்களைத் தொகுத்தல், பரிகாரக் கற்பித்தலை மேற்கொள்ளல், பிள்ளைகளின் பொழுதுபோக்கு அம்சங்களில் கூடிய ஈடுபாடு காட்டல் போன்றவாறான வழிகாட்டல் ஆலோசனைகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பெற்றௌர்களுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. |
URI: | http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5704 |
ISBN: | 9786245736140 |
Appears in Collections: | 8th International Symposium of FIA-2021 |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
Finalized Proceedings 2021 - 10.8.2021 - Page 601-612.pdf | 441.8 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.