Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5742
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorThanurshan, S.-
dc.date.accessioned2021-08-20T04:09:20Z-
dc.date.available2021-08-20T04:09:20Z-
dc.date.issued2021-08-04-
dc.identifier.citation8th International Symposium 2021 on “Promoting Faith-Based Social Cohesion through Islamic and Arabic Studies”. 4th August 2021. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp. 1064-1077en_US
dc.identifier.uri9786245736140-
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/5742-
dc.description.abstractஉலகில் மனித உயிர் என்பது இழந்தால் திரும்பப் பெற முடியாத ஒரு விடயமாகும். அண்மைக் காலமாக இத்தகைய உயிர்களின் நிலைத்திருப்பு தன்;மையென் பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் இலங்கையைப் பொறுத்தவரை அண்மைக் காலமாக வீதி விபத்தில் அதிகமான உயிர்களை உள்வாங்கிக்கொள்ளும் ஒரு நாடாக மாற்றம் கண்டுள்ளது. அதனடிப்படையில் மேல் மாகாணத்தைப் பொறுத்தவரை சமூக, பொருளாதார ரீதியாக விருத்தியடைந்த ஒரு மாகாணமாக காணப்பட்டாலும் தொடர்ச்சியாக அதிகரித்த வீதி விபத்து இடம்பெறும் ஒரு இடமாகவும் காணப்படுகிறது. அண்மைக் காலமாக எடுத்துக்கொண்டால் நாட்டில் வீதி விபத்து என்பது சர்வ சாதாரணமாக இடம்பெறும் ஒரு நிகழ்வாக காணப்படுகிறது. குறிப்பாக 13ம் கட்டை பஸ் விபத்து, பதுளையில் முதல் நாள் பாடசாலை சென்ற சிறுவனின் விபத்து என்பன சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இலங்கை அரசைப் பொறுத்தவரை வீதி விபத்தை தடுக்க முறையான பாதைகளை அமைத்தாலும், கடுமையான சட்டத்தை விதித்தாலும், வீதியில் உயர் தர தொழினுட்பத்தை பயன்படுத்தினாலும் வீதி விபத்தின் எண்ணிக்கை அதிகரிக்;கிறதே தவிர மாறாக குறைவில்லை. அந்தவகையில் உயிர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டும், வீதி விபத்து தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும், தொடர்ச்சியாக வீதி விபத்து ஏற்படுவதன் காரணத்தை கண்டறியும் பொருட்டும், அதனை தடுக்க முறையான தீர்வையும் வழங்கும் பொருட்டும், “இலங்கை சமூகத்தில் அதிகரித்து வருகின்ற வீதி விபத்துகளும் அதற்கான காரணங்களும்" என்ற தலைப்பில் மேல் மாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகவியல் ஆய்வாக இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரண்டாம் நிலைத் தரவுகளை மையப்படுத்திய இவ்வாய்வானது விவரண, விளக்க முறையில் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுளளது. இவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்ட பிரதான விடயங்களாக கடுமையான சட்டங்கள் இன்மை, வீதி ஒழுங்கை பேணாமை, அதிகரித்த மதுபாவனை, பயணிகள் பற்றிய கரிசனை இன்மை மற்றும் அனுபவம் இன்மை என்பன காரணமாக அமைகிறது. இதற்கு கடுமையான சட்டத்தை விதித்தல்,சாரதிகளுக்கு பயணிகள் தொடர்பான விழிப்புணர்வை அதிகரித்தல், தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை உணர்தல் மற்றும் வீதியில் சவாரி ((Riding) செய்பவரின் சாரதி அனுமதியை தடை செய்தல் என்ற பரிந்துரைகளும் இறுதியில் முன ;வைக்கப்பட்டுள்ளது.en_US
dc.language.isoen_USen_US
dc.publisherFaculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka.en_US
dc.relation.ispartofseries8 th International Symposium - 2021;-
dc.subjectவீதி விபத்து,en_US
dc.subjectமோட்டர் மயமாக்கம்,en_US
dc.subjectமேல்மாகாணம்,en_US
dc.subjectநவீன சூழ்நிலை,en_US
dc.subjectமோட்டார் சவாரி.en_US
dc.titleஇலங்கை சமூகத்தில் அதிகரித்து வருகின்ற வீதி விபத்துக்களும் அதற்கான காரணங்களும் : மேல் மாகாணத்தை அடிப்படையாகக் கொண்ட சமூகவியல் ஆய்வுen_US
dc.typeArticleen_US
Appears in Collections:8th International Symposium of FIA-2021

Files in This Item:
File Description SizeFormat 
Finalized Proceedings 2021 - 10.8.2021 - Page.pdf456.05 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.