Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6804
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorபுஸ்பகுமார, செ.-
dc.date.accessioned2023-09-01T04:30:42Z-
dc.date.available2023-09-01T04:30:42Z-
dc.date.issued2023-05-03-
dc.identifier.citation11th International Symposium (IntSym 2023) Managing Contemporary Issues for Sustainable Future through Multidisciplinary Research Proceedings 03rd May 2023 South Eastern University of Sri Lanka p. 382-392.en_US
dc.identifier.isbn978-955-627-013-6-
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/6804-
dc.description.abstractஅபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் அபிவிருத்தி செயற்பாடானது அரசியல் முறைமையின் ஆரோக்கியத்தில் தங்கியுள்ளது. அரசாங்கத்தினால் உருவாக்கப்படுகின்ற கொள்கைகளானது அரசாங்கத்தின் எதிர்கால திட்டம், மக்கள் நலன்சார் செயற்பாடுகள், நாட்டினது அபிவிருத்தி என்பவற்றை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. இலங்கை போன்ற பல்லின நாட்டில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பது என்பது இலகுவான விடயம் ஒன்றல்ல. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எடுத்து புதிய கொள்கையின் கீழ், புதிய பாதையை நோக்கி நாட்டை நகர்த்தி செல்ல திட்டமிட்டிருந்தது. இருப்பினும் அரசாங்கத்தினால் பொறுத்தமற்ற சூழ்நிலையில், முறையற்ற பொதுக் கொள்கை வகுப்பின் காரணமாக அரசியல் முறைமையில் நெருக்கடிகள் உருவாகின. குறிப்பாக வரிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தல், இரசாயன உர இறக்குமதியினை தடை செய்தல், அரச சேவையில் புதிய நியமனங்களை வழங்குதல் என்பன நாட்டில் அப்போதைய சூழ்நிலையில் பொருத்தமற்ற பொதுக்கொள்கைகளாகவே அமைந்தன. இதன் தாக்கம் பொருளாதாரத் துறையிலும் பாரிய பின்னடைவை அடைய செய்ததோடு பலம் பொருந்திய அரசாங்கம் வீழ்ச்சி அடைவதற்கும் காரணமாக அமைந்தது. இஸ்த்திரமற்ற ஆட்சி, நாட்டு மக்களிடையே அமைதியின்மை, ஜனநாயகத்தின் இருப்பு கேள்விக்குறியாதல், நாட்டில் அடிக்கடி இடம்பெறுகின்ற வேலைநிறுத்தங்கள் என்பன நாட்டிற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தின. இவ்வாய்வானது இலங்கையில் அண்மைகாலங்களில் உருவாக்கப்பட்ட பொதுக் கொள்கைகள் என்ற வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட பொதுக்கொள்கைகள் அரசியல் ரீதியில் ஏற்படுத்திய நெருக்கடிகளை ஆராய்வதாக அமைந்துள்ளது. முக்கியமாக பொதுக்கொள்கையினுடைய முக்கியத்துவத்தினை உணர்த்தல் மற்றும் கொள்கையினை அமுல்படுத்தும் போது அதன் சாதக, பாதக விடயங்களை கவனத்தில் எடுத்து அமுல்படுத்துவதன் அவசியம் என்பன இவ்வாய்வினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.en_US
dc.language.isootheren_US
dc.publisherSouth Eastern University of Sri Lanka Oluvil, Sri Lankaen_US
dc.subjectஅரசாங்கம்en_US
dc.subjectபொதுக் கொள்கைen_US
dc.subjectஅரசியல்en_US
dc.subjectஅபிவிருத்திen_US
dc.titleஇலங்கையில் அண்மைகாலங்களில் உருவாக்கப்பட்ட பொதுக் கொள்கைகளும் அதனாலான அரசியல் நெருக்கடிகளும்en_US
dc.typeArticleen_US
Appears in Collections:11th International Symposium - 2023

Files in This Item:
File Description SizeFormat 
IntSym 2023 Proceedings-382-392.pdf546.37 kBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.