Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7686
Title: தொற்று நோய்களும் அவை தொடர்பான இஸ்லாமிய கண்ணோட்டமும்- சமகால கொவிட் - 19 தொற்று தொடர்பான ஆய்வு
Other Titles: Infectious diseases and their Islamic perspectives - a study of contemporary covid-19 pandemic
Authors: Sarjoon, R. A.
Lanshira
Islamic Studies
Keywords: தொற்று நோய்
இஸ்லாமிய கண்ணோட்டம்
கொவிட் - 19
இலங்கை
Issue Date: 2024
Publisher: Faculty of Islamic Studies & Arabic Language South Eastern University of Sri Lanka
Citation: Abstract Compilation of Undergraduate Dissertation (Academic Year 2007/2008 to 2020/2021)
Abstract: இஸ்லாம் என்பது பிரபஞ்சப் படைப்பாளனால் மனித வாழ்வின் சீர்மைக்காக வழங்கப்பட்ட இறைவழிகாட்டலாகும். தொற்று நோய்கள் பற்றிய இஸ்லாத்தின் போதனைகள் மனித வாழ்வு பற்றிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் வழங்குவதுடன், நம்பிக்கையிளம், பயம், கவலை இவற்றிலிருந்து மனிதனை மீட்டெடுக்கின்றன. ஏனெனில் மனிதனை படைத்த இறைவனை நோக்கி மீளச் செய்யும் பணியையே நோய்கள் செய்கின்றன. காலத்துக்குக் காலம் ஒவ்வொரு வகையான தொற்றுக்கள் மனித இனத்தைப் பதம் பார்த்திருக்கின்றன என்பது வரலாற்று ரீதியாக நிரூபணமான ஓர் உண்மையாகும். அந்தவகையில் 20ஆம் நூற்றாண்டின் உலகப் போர்களை விடவும் தாக்கம் கூடியது என்று சொல்லப்படக் கூடிய அளவுக்கு, உலகின் கவனத்தை ஈர்த்துள்ள பெருந்தொற்றான கொவிட்-19 ஓர் உலகப் பேரழிவாகக் கருதப்படுகிறது. ஆய்வானது தொற்று நோய் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டத்தையும் வழிகாட்டுதல்களையும் மதிப்பீடு செய்வததோடு தொற்றுக் காலங்களில் இலங்கைச் சூழலில் முஸ்லிம்கள் எவ்வாறான நடைமுறைகளைக் கையாள வேண்டும் என்பதையும் ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பண்பு சார் முறையில் அமைந்த நூலக ஆய்வாகும். இவ்வாய்வு இரண்டாம் நிலைத் தரவு மூலங்களான இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்கள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் - 19 தொற்று தொடர்பாக வெளிவந்துள்ள நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், சஞ்சிகைகள், இணைய ஆக்கங்கள், பத்திரிகைச் செய்திகள், கட்டுரைகள், இஸ்லாமிய பத்வாக்கள் மற்றும் இதர வெளியீடுகள் என்பவற்றை மீளாய்வுக்குட்படுத்தி தரவுகள் பெறப்பட்டுள்ளன. சாதாரண ஓர் தொற்று நோய் சமூகப் பரவலாக மாறி, ஓர் உயிர் கொல்லி நோயாக மாறுவதற்கு மனிதர்களின் கவனயீனமும் அசமந்தப் போக்குமே பிரதான காரணியாக வரலாறு நெடுகிலும் வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. காணப்பட்டு
URI: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/7686
Appears in Collections:Bachelor of Arts Honours in Islamic Thought and Civilization

Files in This Item:
File Description SizeFormat 
FIA ALL ABSTRACTS-36.pdf425.59 kBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.