Abstract:
திருமறைக் குர்ஆனின் மொழி நடையை திறன் பட விளங்குவதன் ஊடாகவே இறைவன் வகுத்த
சட்டதிட்டங்களையும் கொள்கை கோட்பாடுகளையும் மிகச் சரியாக புரிந்து கொள்ள முடியும்.
அல்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி நடையை நாம் ஆழமாக ஆய்வு செய்கின்ற போது
பெரும்பாலான சொற்கள் பல் வேறு கருத்துக்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதை எம்மால் அவதானிக்க
முடியும். ஒரு சொல் பலவித அர்த்தங்களில் அல்குர்ஆனில் அதிகம் இடம் பெறுவதனால் அதனை
விரிவுரை செய்வதும் தமிழ் மொழிக்கு மொழி பெயர்ப்புச் செய்வதும் அவ்வளவு இலகுவான
காரியமல்ல.
அல்குர்ஆனில் இறைவன் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைப் பிரயோகங்களை சரியாகப் புரிந்து
மொழிபெயர்ப்புச் செய்வதற்கு இல்முல் வுஜுஹி வன் நளாயிர் என்ற கலை பெரிதும் துணைபுரிகிறது.
ஆனால் இல்முல் வுஜுஹி வன் நளாயிர் தொடர்பான ஆய்வுகள் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில்
மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.
ஆகவே இவ்வாய்வானது அல்குர்ஆனின் வார்த்தைப் பிரயோகங்களை மிகச் சரியாகப் புரிந்து தமிழ்
மொழிக்கு மொழி பெயர்ப்புச் செய்வதில் இல்முல் வுஜுஹி வன் நளாயீரின் பங்களிப்பு தொடர்பாக
ஆய்வு செய்கின்றது.