Abstract:
கல்வி என்பது மனித வாழ்வில்; இன்றியமையாத ஒரு பகுதியாகும். அது ஒரு சமூகத்தின் எழுச்சிக்கு
பாரிய பங்கு வகிக்கிறது. கல்வியில் பின் தங்கிய ஒரு சமூகம் எல்லாவற்றிலும் பின்னடைந்தே
இருக்கும். அந்த வகையில் எமது ஆய்வுப்பிரதேசமான ஆலங்குலம் மற்றும் சம்புநகர் கிராமங்கள்
கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் இரு கிராமங்களாகும். இங்கு
கல்வியைத்தொடர ஆர்வமுள்ள பல மாணவர்கள் இருந்தாலும் அவர்களுக்கு கல்வியைத்தொடர
போதிய வளங்கள் காணப்படாமையும் பொருளாதாரமும் பாரிய சவால்களாக காணப்படுகின்றது.
கற்கும் வயதிலள்ள அதிகமான மாணவர்கள்; தமது கல்வியை இடைநிறுத்தி உள்ளனர்.
ஆதனடிப்படையில் பின்தங்கிய நிலையில் காணப்படும் இக்கிராமங்களின் கல்வி மேன்பாட்டிற்கான
ஆலோசனைகளும் பரிந்துரைகளும் இவ்வாய்வின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளன.
பண்புரீதியானதாகக் காணப்படும் இவ்வாய்வின் முடிவுகளுக்காக முதலாம் நிலைத் தரவுகளான
வினாக்கொத்து, நேர்காணல் மற்றும் மறைமுக உரையாடல் என்பவற்றை மையமாகக் கொண்டு
பெறப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்காக Microsoft Excel மென்பொருள்
பயன்படுத்தப்பட்டுள்ளது.