Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/1438
Title: A study on social harmony based on Buddhist and Muslim relationship in Sri Lanka
Authors: Minsara, J.Fathima
Issue Date: 2-Aug-2014
Publisher: South Eastern University of Sri Lanka, University Park, Oluvil #32360, Sri Lanka
Citation: Proceedings of 4th International Symposium 2015 on " Emerging Trends and Challenges on Sustainable Development”, p. 87
Abstract: பல்லின சமூகத்தில் வாழ்கின்ற ஒரு மனிதன் சமூகத்தோடு முரண்பாடுகள் இன்றி இனக்கப்பாட்டோடு ஒற்றுமையாக வாழப்பழகிக் கொள்ளும் நிலையே சமூக நல்லிணக்கம் எனலாம். சமூக நல்லிணக்கம் எனும் எண்ணக்கருவானது இன்று உலக ஒழுங்கில் வலம் வருவது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இலங்கையில் வாழும் மக்கள் பல்லின சமூத்தில் வாழ்கின்றவரகளாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அவர்களுக்கிடையே இனப்பிரச்சினை மற்றும் முரண்பாடுகள் தலை தூக்கியுள்ளதனை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவ்வகையில் எமது நாட்டில் சகல பாகங்களிலும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டு பௌத்த – முஸ்லிம் உறவுகளை அடிப்படையாகக் கொண்ட இவ்வாய்வு முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது எனலாம். இவ்வாறு புராதன காலத்திலிருந்து முரண்படுகள் மற்றும் நல்லுறவுகள் ஏற்பட்டு வருகின்றது. இத்தகைய முரண்பாடுகள் மற்றும் நல்லுறவுகள் ஏற்படாவிடின் மனிதன் மனிதனாகவே வாழ்ந்திருக்க முடியாது. இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் பல கலாசார பண்பாடுகளுக்கு மத்தியில் வாழ்கின்ற அதேவேளை பௌத்த இன மக்கள் மத்தியில் சிறுபான்மை இனமாக வாழ்கின்ற சூழலில் பௌத்த – முஸ்லிம் உறவு நிலைகள் பற்றிய விடயங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இவ்வாறான உறவு நிலைகள் சமூகத்தின் மத்தியில் பல்வேறு சாதக, பாதக விளைவுகளை ஏற்படுத்தி விடுவதனைக் காணலாம். இதற்கு பல்வேறு குழுக்களும் இயக்கங்களும், ஊடகங்களும் தாக்கம் செலுத்துவதனையும் காணலாம். இவ்வகையில் பௌத்த – முஸ்லிம் உறவுகள் ஆரோக்கியமானதாகவும் சில சந்தர்ப்பங்களில் ஆரோக்கியமற்றதாகவும் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
URI: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/1438
ISBN: 978-955-627-053-2
Appears in Collections:4th International Symposium - 2014

Files in This Item:
File Description SizeFormat 
4 th Int Symp_2014_Article_74_Pages from 574-585.pdfArticle 741.44 MBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.