Please use this identifier to cite or link to this item:
http://ir.lib.seu.ac.lk/handle/123456789/3103
Title: | பிராங்போர்ட் பள்ளி மற்றும் விமர்சன கோட்பாட்டின் முக்கியத்துவம் |
Authors: | றியால், ஏ.எல்.எம். |
Keywords: | பிராங்போர்ட்பள்ளி மார்க்ஸ் விமர்சன கோட்பாடு தியோடர் அடோர்னோ மக்ஸ் ஹொக்கன்கைய்மர் |
Issue Date: | 7-Dec-2017 |
Publisher: | South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. |
Citation: | 7th International Symposium 2017 on “Multidisciplinary Research for Sustainable Development”. 7th - 8th December, 2017. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp. 736-752. |
Abstract: | இக்கட்டுரையானது பிராங்போர்ட் பள்ளியின் செயற்பாடுகளில் மாத்திரம் தன் கவனத்தை செலுத்தாமல் அதனுடன் இணைந்ததான சமகாலத்தின் விமர்சன கோட்பாடு தொடர்பாக ஆராய்வதை தன் அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளது. பின் நவீனத்துவ சிந்தனைகளுக்கு எதிராகத் தோற்றம் பெற்ற கடுமையான பிரச்சினைகள் தொடர்பாகவும் இக்கட்டுரையானது ஆர்வத்துடன் ஆராய முற்படுகிறது. மேற்கத்தேய உலகில் 1923இல் முதன்முதலாக பிராங்போர்ட்பள்ளி மார்க்சிஸிய ஆய்வுகளுக்குரிய கல்வி நிறுவனமாக தோற்றம் பெற்றது. காண்ட், ஹெகல், மார்க்ஸ், பிராய்ட், வெபர், மற்றும் லூகாஸ் போன்ற பல்வேறு சிந்தனையாளர்கள் படைப்புகளில் இருந்து கற்றுக்கொண்டதை ஒன்றிணைக்க இப்பள்ளியின் முக்கிய நபர்கள் முயன்றார்கள். மார்க்சியக் கொள்கையைப் புதியதொரு நோக்கில் செழுமைப்படுத்தியவர்களாகவும் இப்புலத்தினர கருதப்படுகின்றனர். இக்கட்டுரையுடன் தொடர்புடைய நூல்கள், கட்டுரைகள், போன்றன சான்றாதாரங்களாக அமைகின்றன. பகுப்பாய்வு மற்றும் விளக்கவியல் ஆகிய அணுகுமுறைகளாக பயன்படுத்தப்பட்டுள்ளன. விமர்சன கோட்பாடுகளின் இரு அம்சங்களின் மீது இக்கட்டுரையானது கவனம் செலுத்துகின்றது. முதலாவது, தியோடர் அடோர்னோ மற்றும் மக்ஸ் ஹொக்கன்கைய்மர் இருவரினதும் இயங்கியல் மறுமலர்ச்சியில் விமர்சன கோட்பாட்டாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரந்துபட்ட அணுகுமுறைகள். இரண்டாவது, இவ்அணுகுமுறையின் விரிவான அறிவார்ந்த கருத்துக்கள் மற்றும் ஹெர்பர்ட் மார்க்யூஸினால் முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றது. எனவே இவ்வாய்வு 21ம் நூற்றாண்டில் விமர்சன கோட்பாடுகளின் போக்கின் ஆரம்பத்தைத் தோற்றுவித்த இவ்அம்சங்களை முன்வைக்க முயலுகின்றது. |
URI: | http://ir.lib.seu.ac.lk/handle/123456789/3103 |
ISBN: | 978-955-627-119-5 |
Appears in Collections: | 7th International Symposium - 2017 |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
Inaternational Symposium 2017 - SEUSL (10).pdf | 314.46 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.