Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6763
Title: மற்றமையுள் இயற்கைச் சூழல் : லக்கானை மையப்படுததிய ஆய்வு
Authors: குணசிவரூபன், ந.
Keywords: லக்கான்
இயற்கைச்சூழல்
மற்றமை
நான்
Issue Date: 3-May-2023
Publisher: South Eastern University of Sri Lanka Oluvil, Sri Lanka
Citation: 11th International Symposium (IntSym 2023) Managing Contemporary Issues for Sustainable Future through Multidisciplinary Research Proceedings 03rd May 2023 South Eastern University of Sri Lanka p. 197-201.
Abstract: மெய்யியலானது உண்மையை தேடுகின்ற துறையாகும். இவ் மெய்யியலானது ஆங்கிலத்தில் Philosophy என அழைக்கப்படுகிறது. ஆதி கிரேக்க காலம் முதல் தற்காலம் வரை மெய்யியலானது வளர்ந்து கொண்டே வந்துள்ளது. இவ்வாறு வளர்ச்சி நோக்கி நகர்ந்து கொண்டு செல்கின்ற மெய்யியலானது பல விடயங்களை பற்றி ஆய்வினை மேற்கொள்கிறது. அந்த வழியில் நவீ னத்துவ வாதியான லாக்கான் என்பவர் சுயம், மற்றமை என்பவைகள் பற்றி தெளிவாக பேசியுள்ளார். நான் என்பது என்னில் இல்லை என்னில் இருந்து வெளியில் இருப்பவையே அதாவது மற்றமையே நான் என்றார். மற்றமையில் இருந்தே நான் என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்கிறார்கள். லக்கான் கூறுகின்ற மற்றமை என்பது மனிதன் தவிர்ந்த வெளியிலுள்ள அனைத்து விடயங்களின் கூட்டே நான் என்பதை உருவாக்குகிறது. எமது மனதின் சக்தி மற்றமைகளை நானாக ஏற்கிறது. லக்கானின் கூற்றுப்படி நான் என்பது என்னில் இல்லை புறத்தில் உள்ள மற்றமைகள் தான் நான் எனலாம். எனின் சுற்றியுள்ள இயற்கை சூழலும் மற்றமைகளின் உள்ளடக்கமாகும். இயற்கைச் சூழல் எனும் போது தாவரங்கள், மலை, நீர், மணல், பறவைகள், தீ, காற்று, மீனினங்கள், விலங்கினங்கள், நுண்ணுயிர்கள் மற்றும் கண்ணில் புலப்படாத சிறிய உயிரினங்கள் போன்ற மனிதனின் தலையீடின்றி உருவாகிய அனைத்தும் இதில் அடங்கும். மற்றமையுள் வருகின்ற பல பகுதிகளில் இயற்கை சூழலும் ஒரு பகுதியாகும். லக்கான் நான் என்பது என்னில் இல்லை என்றும ; என்னிலிருந்து வெளியில் உள்ள மற்றமைகளே நான் என்றும் கூறினார். இதன் படி நான் என்பது என்னில் இருந்து வெளியில் உள்ள மற்றமைகள் எனும் போது அதில் ஒன்றாக இயற்கை சூழலினையும் அவர் நினைத்திருக்க வேண்டும். லக்கான் கூறுகின்ற மற்றமையுள் இயற்கை சூழல் உள்ளடங்குமா? என்பதே இவ்வாய்வின் பிரச்சினையாக அமைந்தது. லக்கான் கூறுகின்ற மற்றமைகளுள் இயற்கை சூழலும் ஒன்று என்பதை அடையாளம் காணுதல் என்பது ஆய்வின் நோக்கமாகும். இவ் ஆய்வில் விவரண ஆய்வு முறையும் அடிப்படை ஆய்வு முறையும் பயன்படுத்தப்படவுள்ளன
URI: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/6763
ISBN: 978-955-627-013-6
Appears in Collections:11th International Symposium - 2023

Files in This Item:
File Description SizeFormat 
IntSym 2023 Proceedings-197-201.pdf543.02 kBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.