Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/723
Title: நிலைத்து நிற்கும் சூழல் சுற்றுலாவுக்கான வாய்ப்புக்களும், தடைகளும்
Other Titles: அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்திய ஒரு ஆய்வு
Authors: சசிவதனி, த
முஸ்தபா, ஏ. எம். எம்
Keywords: நிலைத்து நிற்கும் சூழல் சுற்றுலா
சூழல் சுற்றுலா மையங்கள்
பொதுமக்கள் பங்களிப்பு
சுற்றுலா முகாமைத்துவம்
Issue Date: 17-Jan-2014
Publisher: இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
Citation: Proceedings of the Second Annual Research Conference 2013 on "Emergence of Novelty in Business Management, pp 162- 168
Abstract: சம காலத்தில் சூழல் சுற்றுலா முக்கிய தொழிற்கூறாக வளர்ச்சி அடைந்து வருகின்றது. சுற்றுலாத்துறையில் முக்கியத்துவம் பெற்றிருந்த அம்பாறை மாவட்டத்தின் சூழல் சுற்றுலாவுக்கான வாய்ப்புக்களை யுத்தம் இரு தசாப்தங்களுக்கு பின்தள்ளி வைத்தது. அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் சூழல் சுற்றுலாவுக்கான வாய்ப்புக்களையும், தடைகளையும் இனங்காணும் கண்ணோட்டத்தில் இந்த ஆய்வு விளங்குகின்றது. இந்த ஆய்வில் அம்பாறை மாவட்டத்தில் சூழல் சுற்றுலாவுக்கான வாய்ப்புக்களை இணங்காணல், தடைகளை அடையாளப்படுத்துதல், முன்னேற்றுவதற்கான விதந்துரைகளை முன்வைத்தல் என்பன முக்கிய நோக்கங்களாக வரையறுக்கப்பட்டன. முதலாம் இரண்டாம் நிலத்தரவுகளைப் பயன்படுத்தி விபரண அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சூழல் சுற்றுலாவை அபிவிருத்தி செய்வதில் மூலதனப் பற்றாக்குறை, உட்கட்டமைப்பு வசதிகளின் விருத்தியின்மை, பண்முகப்படுத்தப்படாத அரச அபிவிருத்திச் செயற்பாடுகள், சிறந்த திட்டமிடலின்மை, அரச நிறுவனங்களின் குறைவான ஒத்துழைப்பு, பொது மக்கள் பங்களிப்பு குறைவாக இருத்தல் போன்றன தடைகளாக இனங்காணப்பட்டன. அம்பாரை மாவட்டத்தில் காணப்படும் அறுகம்பே சுற்றுலா அமைப்பின் பங்களிப்பினை அதிகரித்தல், சுற்றுலா முதலீட்டாளர்களை ஊக்குவிக்க வங்கிகள் கடனை விஸ்தரித்தல், ஒழுங்கமைந்த முகாமைத்துவம், நிலைத்திருக்கும் சூழல் சுற்றுலா மையங்களை அபிவிருத்தி செய்தல், பொது மக்களின் பங்களிப்பினை அதிகரித்தல் மூலம் சூழல் சுற்றுலாவை ஊக்குவிக்க முடியும் என இந்த ஆய்வு விதந்துரை செய்கின்றது.
URI: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/723
ISSN: 2279-1280
Appears in Collections:2nd Annual International Research Conference - 2013

Files in This Item:
File Description SizeFormat 
21 Pages 162-168 Proceeding 2014.03.14 (Final Version)-22.pdf119.99 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.