Please use this identifier to cite or link to this item: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5135
Title: மனஅழுத்தத்தை குறைப்பதில் ‘வாட்ஸ்அப் ஸ்டேடஸ்’ (Whatsapp Status) இன் செல்வாக்கு
Other Titles: Impact of Whatsapp status on reducing stress
Authors: Ashfa, M. A. F.
Ijas Mohamed, A.
Zunoomy, M. S.
Keywords: Whatsapp status
மனஅழுத்தம்
பல்கலைக்கழக மாணவர்கள்
சமூகவலைத்தளங்கள்
Issue Date: 22-Dec-2020
Publisher: Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka.
Citation: 7th International Symposium - 2020. Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka, pp. 713-723.
Abstract: இன்றைய வேலைப்பளுவான காலகட்டத்தில் அனைவருக்கும் ஏதோ ஒருவகையில் மனஅழுத்தம் ஏற்படுகின்றது. இதனை விட்டும் தவிர்ந்திருக்க முடியாதளவிற்கு மனித வாழ்க்கைப் போக்கு மாற்றமடைந்துவிட்டது. மறுபுறம், நவீன தொழிநுட்பம் மனித வாழ்வின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில், ஒரு மனிதன் தனக்கு ஏற்படுகின்ற மனஅழுத்தத்தை கையாள்வதில் அதிகரித்த சமூகவலைத்தளங்களின் பாவனையும் தாக்கம் செலுத்துகின்றது. அவற்றில் குறிப்பாக வாட்ஸ்அப் பாவனையும், அதிலும் whatsapp status பதிவேற்றம் செய்வதும், பார்வையிடுவதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்தவகையில், வாட்ஸ்அப் ஸ்டேடஸ் இடுபவர்கள் மற்றும் அதனைப் பார்ப்பவர்கள் மத்தியில் மன அழுத்தத்தை குறைப்பதில் செல்வாக்கு செலுத்துகின்றதா என்பதனை கண்டறிவது இவ்வாய்வின் நோக்கமாக உள்ளது. இவ்வாய்விற்காக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 206 மாணவ, மாணவிகள் எழுமாறாக மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டனர். முதலாம் நிலை தரவுகள் வினாக்கொத்து, கலந்துரையாடல், அவதானம் மூலம் இரண்டாம் நிலை தரவுகள் ஆய்வுக் கட்டுரைகள், சஞ்சிகைகள், இணையக்கட்டுரைகள் என்பன மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டு அள-நஒஉநட மூலம் அத்தரவுகள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்களில்; வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களிடத்தில் ஸ்டேடஸ் இடுவது தொடர்பான விடயதானங்களை ஆய்வுக்குட்படுத்திய இவ்வாய்வானது, வாட்ஸ்அப் பாவனை அதிகமாக உள்ளதனை கண்டறிந்துள்ளது. அத்துடன், வாட்ஸ்அப் இல் ஸ்டேடஸ் இடுவதிலும் பார்ப்பதிலும் அவர்களின் மனோநிலைகள் எவ்வாறு காணப்படுகின்றன என்பன ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. இதன்போது, அவர்கள் ஸ்டேடஸ் இடுவதில் அவர்களின் மனோநிலைகள் செல்வாக்கு செலுத்துகி;ன்றன. குறிப்பாக, அவர்கள் தங்கள் உணர்வுகளை பகிர ஸ்டேடஸ் இடுவதற்கு ஒரு காரணமாக உள்ளது. அவ்வாறே, ஸ்டேடஸைப் பார்ப்பதற்கு பிறரின் உணர்வுகளை புரிந்துகொள்ள முனைவது ஒரு விடயமாக அடையாளப்படுத்தப்படுகின்றது.; தங்கள் கவலைகளை, சோர்வுகளை நீக்கிக்கொள்ள ஸ்டேடஸ் பார்ப்பது ஐம்பது வீதமானோருக்கு ஆறுதலளிப்பது இவ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம், ஸ்டேடஸ் ஐ இடுவதும் பார்ப்பதும் அதனைப் பாவிப்பவர்களுடைய மனஅழுத்தத்தை குறைப்பதில் செல்வாக்கு செலுத்துவதை இவ்வாய்வின் மூலம் அடையாளப்படுத்த முடிகின்றது. அதேபோன்று, இவ்விடயம் உளவளத்துணையாக அமைவதனையும் இவ்வாய்வு கண்டறிந்துள்ளது.
URI: http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5135
ISBN: 978-955-627-252-9
Appears in Collections:7th International Symposium of FIA-2020

Files in This Item:
File Description SizeFormat 
Final Proceedings of fiasym2020 - Page 727-737.pdf.pdfFinal Proceedings of fiasym2020 - Page 727-737674.86 kBAdobe PDFThumbnail
View/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.